திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா மகிமைகள்

Author : Somasundaram R

கார்த்திகை தீபத்திருவிழா மகிமைகள்

சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். திருவண்ணாமலையின்  கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பழைமையும் பெருமையும் வாய்ந்த திருவிழா. இந்த பதிவில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் தெய்வீக மகிமைகளை காண்போம்.

நினைத்தாலே முக்தி தரும் மலை திருவண்ணாமலை

மலையே சிவன்

Karthikai Deepam

திருவண்ணாமலை மற்ற ஸ்தலங்களை போல் அல்லாமல் மலையே சிவனாக உள்ளது. இந்த மலை அக்னி மலை என்றும் தீப மலை என்றும் போற்றப்படுகிறது. மாதம் தோறும் பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த அக்னி மலையை சுற்றி வந்து வழிபடுகின்றனர். கார்த்திகை மாதம் தீபத்திருவிழாவின் பொழுது கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

கார்த்திகை மாத மகிமை

Karthikai Deepam

கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியானது கார்த்திகை நட்சத்திரத்தில் வருகிறது. கார்த்திகை நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாகும். ஆறு நட்சத்திரங்களையும் இணைத்தால் ஜோதி வடிவம் போலவும், தீயவைகளை நீக்கும் கத்தி போலவும் காணப்படுகிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் 10 நாள் திருவிழா மிகவும் பிரசித்தி வாய்ந்த ஒன்று.

மலையின் சிறப்பு

Karthikai Deepam

திருவண்ணாமலை 260 கோடி ஆண்டுகள் பழமையான மலை. இது 14 கி.மீ. சுற்றுளவு கொண்ட பசுமையான மலை. மலையை சுற்றிலும் குகைகளும், சுனைகளும், மருத்துவ குணம் மிகுந்த மூலிகைகளும் நிறைந்து உள்ளது. இம்மலையை சுற்றி வந்தால் ஒரு மனிதனின் அகமும் புறமும் தன்னை அறியாமல் சுத்தமாகிறது என்பது ஆன்மிகத்தை கடந்த அறிவியல் உண்மை.

மலை தீபத்தின் மகிமை 

Karthikai Deepam

இம்மலையின் உச்சியில் ஏற்றப்படும் தீபம் மிகப்பழமை வாய்ந்தது. திருகார்த்திகை தினத்தன்று மாலை 6 மணிக்கு 2, 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவனடிவாழ்க   - சிவபுராணம்(எட்டாம் திருமுறை​)

Karthikai Deepam

 

 Login to Comment